- சென்னை, மாவட்டச்செய்திகள்

சென்னை கிரைம் சிதறல்கள் செல்போன் பறித்த இருவர் கைது…

 

 

அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கடந்த 2-ந்தேதி கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத இருவர் அவரது செல்போனை பறித்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற பெரியமேடு உதயகுமார்(வயது 21), புரசைவாக்கம் சூர்யா(19) ஆகிய இருவரை கைது செய்து செல்போனை கைப்பற்றி அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த முருகன்(84) என்பவர் இரவு வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு உறங்கியபோது திருவான்மியூர் செல்வம் (எ) செல்வராஜ்(25) என்பவர் வீட்டினுள் நுழைந்து பணம் ரூ.4000 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருட முயன்றவரை கையும் களவுமாக பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது

நேற்று முந்தினம் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளூவர் தெரு, பழைய வண்ணாரபேட்டை என்ற இடத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சேகர்(44) என்பவரை போலீசார் பிடித்து அவரிடமிருந்து பணம் ரூ.130 மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

ஆண் பிணம்

நேற்று முந்தினம் காலை அண்ணாசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயபேட்டை வெஸ்ட் காட் சாலை பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply