- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சென்னை கிரைம் சிதறல்கள் கஞ்சா விற்ற பெண் கைது…

 
சென்னை மண்ணடி பகுதி, முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரகாசம் சாலை, விநாயகர் கோவில் சந்திப்பில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த திருவொற்றியூர் வஷீராபேகம்(வயது50) என்பவரை போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.டி.எச்.ரோடு கல்லறை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மதுபான பாட்டில்களை விற்பனை செய்த ஆவடி முருகன்(45), கரூர் தங்கம்(42) ஆகியோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டையால் தாக்கிய நபர் கைது
பட்டாபிராம் வள்ளலார் நகர் தாமோதரன்(50) என்பவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது எதிர் வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரன்(65) என்பவருடைய நாய் தாமோதரனை பார்த்து குறைத்தது. இதில் ராமச்சந்திரனுக்கும், தாமோதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் ராமச்சந்திரன் கட்டையால் தாக்கியதில் தலையில் காயமடைந்த தாமோதரன் திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கொடுத்த புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெயர் விலாசம் தெரியாத முதியவர் பிரேதம்
கோடம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவர் ஹவுஸ் எதிரில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலில் பேரில் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply