- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சென்னையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 2 ேபர் கைது

சென்னை, ஏப். 4-
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர் . அவர்கள் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கமிஷனர் உத்தரவு
சென்னையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்யுமாறு  மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி காசிமேடு காவல் எல்லைக்குட்பட்ட ஷேக் மேஸ்திரி தெரு, கொடிமா சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த லட்சுமி என்ற நொண்டிலட்சுமி (வயது50) என்பவரை கைது செய்தனர். 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் கண்ணகிநகர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணகிநகர் 2-வது மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முல்லா என்ற சிவகுமார் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து  1 கிலோ  800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply