- செய்திகள்

சென்னையில் நாளை நடக்கிறது புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (2 காலம்) வைகோ அறிக்கை…

சென்னை, ஆக. 26-
புதிய கல்விக்கொள்கையைக்கண்டித்து, ம.தி.மு.க.சார்பில் சென்னையில் நாளை (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று, வைகோ தெரிவித்தார்.
இது தொடர்பாக, ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா கருத்தியலைத் திணித்து சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்டவை புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டம்
இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கை குறித்து முழுமையான விவாதங்களும், கருத்துக் கேட்புகளும் இன்றி மாநில அரசுகளின் கருத்துக்களையும் அலட்சியப்படுத்திவிட்டு, புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க. அரசு திணிக்க முனைந்து செயலாற்றி வருவதைக் கண்டித்தும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வலியுறுத்தியும் ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில், நாளை (27-ந் தேதி) காலை 10 மணிக்கு சென்னை-மத்திய சுங்கத்துறை அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பெற்றோர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

Leave a Reply