- செய்திகள்

சென்னையில் இன்று வலுவான தரைக்காற்று வீசும் வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை,ஆக.17-

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக சென்னையில் பகல் நேரத்தில் வலுவான தரைக்காற்று வீசும். அதே போல் மாலை மற்றும் இரவு ேநரத்தில் நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply