- செய்திகள், வணிகம்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

 

அரசுக்கு சொந்தமான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சென்ற நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.898 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. வாராக் கடன் அதிகரித்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்த வங்கி ரூ.174 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,711 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் 6.09 சதவீதத்தில் இருந்து 11.95 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 3.61 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

Leave a Reply