- செய்திகள், மாநிலச்செய்திகள், வணிகம்

சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்…

மும்பை, டிச. 16:-

இந்தியப் பங்குசந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று உயர்வுடன் முடிந்தது.  மும்பை பங்குச்சந்தை 170 புள்ளிகளும், நிப்டி 50 புள்ளிகளும் உயர்ந்தன.

அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற எண்ணத்தால் நேற்று பங்குசந்தையில் வங்கித்துறையின் பங்குகள் அதிக அளவு கைமாறப்பட்டன. இதனால்,  முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்தனர். இதனால், பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது.

30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 170.09 புள்ளிகள் உயர்ந்து, 25,320.44 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 50.85 புள்ளிகள் அதிகரித்து, 7,700.90 புள்ளிகளில் முடிந்தது

பங்குச்சந்தையை கணக்கிடப்பயன்படும் 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ., என்.டி.பி.சி.,ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி. டாடா மோட்டார்ஸ், எச்.டி.எப்.சி. மாருதிசுஸூகி, கோல்இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன.

Leave a Reply