- செய்திகள், வணிகம்

சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்

புதுடெல்லி, ஏப். 5:-

இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான நேற்று ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 130 புள்ளிகளும், நிப்டி 45 புள்ளிகளும் உயர்ந்தன.

ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் முதல் நிதிக்கொள்கையை இன்று வெளியிடுகிறது. இதில் கடனுக்கான வட்டி 0.50 சதவீதம் குறைக்கப்படும் என  பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் ஏற்றத்துடன் முடிந்தது.

வர்த்தகம் முடிவில் மும்பைப்பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 130.01 புள்ளிகள் உயர்ந்து, 25,399.65 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 45.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,758.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

பங்குச்சந்தையின் உயர்வைக் கணக்கிடப்பயன்படும் 30 நிறுவனங்களின்  பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிந்தன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டாக்டர்ரெட்டீஸ், என்.டி.பி.சி. பஜாஜ் ஆட்டோ, உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை அடைந்தன.

Leave a Reply