- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

செனனையி் கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தூதரகத்தில் மீனவர்கள் முற்றுகை

சென்னை, மார்ச்.1-
பங்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இலங்கை தூதரகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டது தொடர்பாக 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், நிம்மதியாக மீன்பிடிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை நேற்று  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீஸ் குவிப்பு

அனைத்திந்திய மீனவர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா, காங்கிரஸ் இயத்துல்லா, த.மா.கா. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை தூதரகம் முன்பு இரும்பு தடுப்பு கம்பிகள் போடப்பட்டு இருந்தன. காலை முதல் நூற்றுக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்படி இருந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மீனவர்கள் தடுப்பு கம்பியை தள்ளிக் கொண்டு தூதரகத்தை முற்றுகையிட செல்ல முயன்றனர்.
500 பேர் கைது

இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது. போராட்டத்தில் திடீரென ஒரு பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார். அவரை உடனே போலீசார் தடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 500–-க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்து வள்ளுவர் கோட்டத்துக்கு அருகே உள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

Leave a Reply