- ஆன்மிகம், செய்திகள்

சூரிய நமஸ்காரம்…

 

விடிகாலை பனி படர்ந்தும், 7 மணிக்குள் சூரியனின் கதிர்கள் வெளிச்சத்தை உமிழவும் தொடங்கிவிட்டது.  எல்லாக் காலங்களிலும் செய்யக்கூடிய பயிற்சிதான் சூரிய நமஸ்காரம்.  ஆன்மீகமும், ஆரோக்கியமும் தவழும் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்.
* பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு வயிறு காலியாக இருக்கவேண்டும்.
* சாப்பாட்டுக்கு பிறகு 4 மணி நேரம், சிற்றுண்டிக்கு பிறகு 2 மணி நேரம் பானங்களுக்குப் பிறகு ஒரு மணி நேரம் என பயிற்சி செய்ய உணவு இடைவெளி அவசியம்.
* அதிகாலை, காலைக் கடன்களை முடித்தபிறகு சூரிய உதயத்தினை ஒட்டிய நேரம், சூரிய நமஸ்காரம் செய்ய சிறப்பான நேரம்.
* சூரிய நமஸ்காரம் செய்ய, திறந்தவெளி, தூய்மையான காற்றோட்டம் நிறைந்த பகுதியாக இருப்பது நல்லது. அதே வேளையில் நல்ல காற்றோட்டமான அறையிலும் பயிற்சி செய்யலாம்.
* குழுக்களாகவோ, தனிநபராக பயிற்சியை மேற்கொள்ளலாம்.
* சூரிய நமஸ்காரத்திற்கு முன்பு அல்லது பிறகு குளிப்பதற்கு 30 நிமிட இடைவெளி தருவது நல்லது.
* சுத்தமான பாய், போர்வை, தடிமனான விரிப்பு பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
* பெண்கள் மாதவிடாய் காலங்களில் மற்றும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் சூரிய நமஸ்காரம் செய்தல்  கூடாது.
* உயர் ரத்த அழித்தம், குடலிறக்கம், தன்டுவட பாதிப்பு போன்ற பிரச்னை உள்லவர்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயிற்சி மேற்கொள்வது நல்லது.

Leave a Reply