- செய்திகள்

சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் லலிதா குமாரமங்கலம் தகவல்

சென்னை,ஆக 25-
பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என  தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
பேட்டி
சென்னை வந்திருந்த தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நல்ல தீர்ப்பு கிடைக்கும்
பெண்களை 14 வினாடிகள் அல்ல… 10 வினாடிகள் தொடர்ந்து உற்றுப் பார்த்தாலே குற்றம் தான்.  மேலும் எல்லா சமூகத்தின் பெண்களுமே பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரள மாநிலத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைப் பிரிவு ஆணையராக உள்ள ரிஷிராஜ் சிங் கல்லூரி ஒன்றில் மாணவிகளிடையே பேசிய போது, ஒரு பெண்ணை, தொடர்ந்து 14 வினாடிகள் வெறித்துப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடர முடியும் என்று அண்மையில் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு லலிதா குமாரமங்கலம் கூறினார்.

—–

Leave a Reply