- உலகச்செய்திகள், செய்திகள்

சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

 

ேசவிர்வில்லே, ஏப்.6-
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள மாநிலம் டென்னெஸ்சி. இந்த மாநிலத்தில் கிழக்கில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள மலைப்பகுதிகள் பார்க்க பிரமிப்பாக இருக்கும். இந்த பகுதியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்த பகுதிகளை பெல் 206 சுற்றுலா ஹெலிகாப்டரில் 5 பேர் கண்டுகளித்தனர். அப்போது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் உடல் கருகி பலியானார்கள். இந்த தகவலை டென்னெஸ்சி அவசரகால நிர்வாக செய்தித்தொடர்பாளர் பிளேனரும் உறுதிப்படுத்தினார்.
————

Leave a Reply