- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சுங்க சாவடி கட்டண உயர்வை நிறுத்த வேண்டும்

சென்னை, ஏப். 1-
‘‘சுங்கக் கட்டண  பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு,  சுங்க சாவடிகளின்  கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என கருணாநிதி கூறி உள்ளார்.
நுழைவு கட்டணம்
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள  18 சுங்கச் சாவடிகளில்  நுழைவு கட்டண உயர்வு மார்ச் 31-ந்தேதி (நேற்று) இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் மொத்தம்  44 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.  இவற்றில் 26  இடங்களில் செப்டம்பர்  1-ந் தேதியும், 18  இடங்களில் ஏப்ரல்  1-ந்தேதியும்  கட்டணம்  அதிகரிப்பது என்பது நடைமுறையிலே உள்ளது. அதன்படி,  திருவள்ளூர்,  விழுப்புரம்,  சேலம்,  தூத்துக்குடி, வேலூர், நெல்லை,  திருச்சி, மதுரை  ஆகிய மாவட்டங்களில்,  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள  18 சுங்கச் சாவடிகளில்  கட்டணம் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
வேண்டாத வேலை
சுங்கச்சாவடிகளை  நடத்தும்  தனியார் நிறுவனங்கள் சாலை பராமரிப்பு  எதையும்  செய்யாமல்,  இதன் பயனை அனுபவித்து வருகிறார்கள்.   சுங்கக்கட்டணத்தால்   நடுத்தர மக்களும்,  வியாபாரிகளும்,  லாரி உரிமையாளர்களும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  சுங்கக் கட்டணத்தை மேலும் உயர்த்துவது என்பது  வேண்டாத வேலையாகும்.  எனவே  மத்திய அரசு இந்த பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு,  சுங்க சாவடிகளின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

Leave a Reply