- காஞ்சிபுரம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

சீரடி சாய்பாபா கோவில் அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம்,மார்ச்.8-
காஞ்சிபுரம் அருகே, மேல்மதுரமங்கலம் பகுதியில், சீரடி சாய்பாபா கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை நடந்தது.
சீரடி சாய்பாபா கோவில் காஞ்சிபுரம் அருகே  மேல்மதுரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீதத்ராத்ரேயா சிவ சாயி டிரஸ்ட் சார்பில், தியான மண்டபத்துடன் கூடிய மகான் சீரடி சாய்பாபா கோவில் கட்டப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சித்தேஸ்வரர் சுவாமி கணேசானந்தகிரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ரவி பச்சமுத்து, இமயமலை ஸ்ரீராஜயோகி மோகன் குருஜி, ரத்தினகிரி ஸ்ரீ தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை ஸ்ரீ தவத்திரு கலவை சச்சிதானந்த சுவாமிகள், நெல்லை வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply