- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி பாஜனதா அல்லாத மாநில அரசுகளுக்கு அச்சுறுத்தல்

கவுகாத்தி, ஏப்.7-

சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பா.ஜனதா  அல்லாத மாநில அரசுகளை மத்திய அரசு அச்சுறுத்தி வருவதாக, காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

மிரட்டல்

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சச்சின் பைலட், கவுகாத்தியில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

‘‘சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் பயன்படுத்தி, பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளை மத்திய அரசு  மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.

வியாபம் ஊழல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு மத்திய அரச சி.பி.ஐ.யை பயன்படுத்தியது. ஆனால், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

வியாபம் ஊழல் விவகாரத்தில் பலர் மர்மமாக மரணம் அடைந்தும், மத்திய பிரதேச மாநில பா.ஜனதா முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மீது மத்திய அரசோ அல்லது சி.பி.ஐ.யோ எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

ஆட்சி கவிழ்ப்பு

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலப்பிரயோகத்தின் மூலம் அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் ஆட்சிகளை அவர்கள் கவிழ்த்தனர்.

தற்போது மணிப்பூர் ஆட்சியை கவிழ்க்க முயன்று வருகிார்கள். அசாம், வகுப்புவாத மோதலற்ற அமைதியான மாநிலமாகும். அங்கு தொடர்ந்து ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் அரசுகள்தான் இதற்குக் காரணம்.

பா.ஜனதாவுடன் உடன்பாடு

பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் பா.ஜனதா ரகசிய உடன்பாடு செய்துள்ளது. பா.ஜனதாவுக்கு தனது ஓட்டுவங்கி மீது நம்பிக்கை இல்லை.

எனவே பத்ருதீன் தலைமையிலான கட்சியின் மூலம் காங்கிரஸ் ஓட்டுகளை சிதற வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

………………………

(செய்திக்குள் பாக்ஸ்)

‘வளர்ச்சித் திட்டங்களை நிறுத்திய
நரேந்திரமோடி’ – குலாம் நபி ஆசாத்

அசாம் மாநிலம், பிலாசிபரா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார். அவர் கூறியதாவது-

‘‘அசாம் மாநில புவியியல் அமைப்பு காரணமாக அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலை இருந்து வந்தது. இதைப் போக்கி, அசாம் மற்றும் வட கிழக்கு மாநிங்களை முன்னேற்றுவதற்காக மானியத்துடன் கூடிய முதலீடு செய்யும் சிறப்புத்திட்டத்தை காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்பு பெருகியது.

ஆனால், இது தவறான கொள்கை என்று கூறி பிரதமர் மோடி அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது எப்படி தவறான கொள்கையாகும்?. மத்திய அரசு அசாமுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான, வடகிழக்கு மாநிலங்களுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது’’.

இவ்வாறு அவர் கூறினார்.

—-..

Leave a Reply