- சினிமா, செய்திகள்

சிவகார்த்திகேயனை பாராட்டிய டைரக்டர் ஷங்கர்…

 

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் முதல்பாடலை டைரக்டர் ஷங்கர் சென்னையில் வெளியிட்டார். இதற்கான விழாவில் படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இசையமைப்பாளர்அனிரூத், மற்றும் படக்கலைஞர்கள் ரசூல் பூக்குட்டி, முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். விழாவில் படத்தை தயாரிக்கும் `24 ஏஎம்' நிறுவனத்தை படஅதிபர் ஏவி.எம்.சரவணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசியதாவது. “ரஜினிமுருகன் படத்தை பார்த்தபோது சிவா பெரிய நடிகராக வளர்ந்து வருகிறார் என்று தெரிந்தது. இப்படியே இன்னும் ஐந்து, பத்து வருஷம் அவர் நடிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால் அடுத்த படத்திலேயே பெண் வேட மேக்கப் எல்லாம் போட்டு அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்று எண்ணுகிற அவரது எண்ணம் பாராட்டுக்குரியது. இந்த சிந்தனைக்காகவே அவர் சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு போவார். அந்த படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷூம் பெரிய இடத்துக்கு வருவார். இசையமைப்பாளர் அனிரூத்தை எப்போது சந்தித்தாலும் ஆச்சரியப்படுத்துவார். `மான்கராத்தே' பட சமயத்தில்  அவரை சந்தித்தபோது  கர்நாடக சங்கீதம் கற்று வருவதாக சொன்னார். இப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ரொம்ப பிசியாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் `இல்ல சார்..படங்களை நானாக குறைத்துக் கொண்டேன். நிறைய படங்களை ஒப்புக்கொள்ளும்போது மிஷின் மாதிரி பாடல்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் உண்டாகி விடுகிறது. இப்போது படங்களை குறைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறேன்' என்றார். அவரது இந்த சிந்தனையையும் நான் ஆரோக்கியமாகத்தான் பார்க்கிறேன்'' என்றார்.
விழாவுக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர ஆர்.டி.ராஜா வரவேற்றார்.

Leave a Reply