- காஞ்சிபுரம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

சிலைக்கு தே.மு.தி.க.வினர் மரியாதை எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்த நாள்

உத்திரமேரூர், ஜன.18-–

காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடினர்.  அவருடன் மாவட்ட துணை செயலாளர் வி.பி. ஜான், மாநில மின் தொழிற்சங்க துணைத் தலைவர்  சர்தார், பேரூர் கழக செயலாளர் குமார், ஒன்றிய கவுன்சிலர் வனஜா அன்பழகன், மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன் மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply