- செய்திகள், வணிகம்

சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு எதிரொலி 15 தினங்களில் 13 லட்சம் டெபாசிட்டுகள் தபால் நிலையங்களில் மக்கள் வெள்ளம்

புதுடெல்லி, ஏப்.19:-

சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு எதிரொலியாக, 2016 மார்ச் மாதத்தின் கடைசி 15 தினங்களில் தபால் நிலையங்களில் 13 லட்சம் புதிய டெபாசிட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த காலத்தில் சராசரியா 5 லட்சம் புதிய டெபாசிட் கணக்குகள் தொடங்கப்படும் என்று அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலாண்டுக்கு ஒரு முறை

வங்கிகளை ேபான்று சிறுசேமிப்புகளுக்கும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கு, பி.பி.எப். கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்புகளுக்கான வட்டியை 1.30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச்சில் மத்திய அறிவித்தது. இதனையடுத்து சிறு முதலீட்டாளர்கள் அதிக வட்டி வருவாய் பெறும் நோக்கில் கடந்த மாதத்தின் கடைசி 15 தினங்களில் தபால் நிலையங்களில் 13 லட்சம் டெபாசிட் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து அஞ்சல் துறை பணியாளர் கூறியதாவது:-

தபால் நிலையங்களில் நீண்ட, மாதந்திர டெபாசிட் செய்யும் போது அப்ேபாது என்ன வட்டி விகிதமோ அதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே ஏப்ரல் மாதம் முதல் வட்டி குறையும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் கடந்த மாதத்தில் அதிக அளவில் புதிய டெபாசிட் கணக்குகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதத்தின் கடைசி 15 தினங்களில் மட்டும் 13 லட்சம் புதிய டெபாசிட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலத்தில் சராசரியா புதிதாக 4 முதல் 5 லட்சம் கணக்குகள் மட்டுமே தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply