- செய்திகள், மாநிலச்செய்திகள்

சிறுவனை இளைஞராக கருதி புதிய சட்டத்தின் கீழ் வழக்கு ஆடு மேய்த்த சிறுமி பலாத்காரம்:

மெயின்புரி (உ.பி.), பிப்.7-
ஆடு மேய்த்த சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் மீது, திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இளைஞராக கருதி ‘‘பாலியல் பலாத்கார வழக்கு’’ பதிவு செய்யப்பட்டது.
சிறுமி பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் அய்லா பகுதியில் உள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த 16 வயது சிறுவன், சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் உயிருக்கு போராடிய அந்த சிறுமியை அப்படியே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டான்.
இந்த நிலையில் சிறுமியை மீட்டு, பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சையளித்த டாக்டர், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் அந்த பலாத்கார சிறுவனை கைது செய்தனர்.
வழக்குப்பதிவு

அவன் மீது திருத்தப்பட்ட இளைஞர் சட்டத்தின் (குழந்தைகளுக்கு பாதுகாப்பு) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சட்டத்தின்படி, 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களை இளைஞராக கருதி வழக்குப் பதிவு செய்ய முடியும்.
மேலும் அவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது. இதையடுத்து சிறுவன் மாவட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். சிறுவனிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவனை காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply