- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சிறுத்தைபுலி வலையில் சிக்கியது உதகை அருகே

 
நீலகிரி, மார்ச் 2:-

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்து லவ்டேல் அருகே காந்திநகர் என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் கம்பியில் சிலர் வலை வைத்துள்ளனர். அந்த சுறுக்கில் நேற்று 2 வயது மதிக்கதக்க ஆண்  சிறுத்தை ஒன்று சிக்கி கொண்டது.
இதை பார்த்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் சென்று மயக்க ஊசி போட்டு சிறுத்தையை மீட்டு  சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் இதே வனப்பகுதியில் சிறுத்தையை விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் வலை  வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply