- செய்திகள், விளையாட்டு

சிம்லாவில் தேசிய சைக்கிள் பந்தயப் போட்டி

 

சிம்லா, ஏப்.6:-
இமாசலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் ஹீரோ எம்டிபி சைக்கிள் பந்தயப் போட்டி வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது.

இந்தப் போட்டியில் சிம்லா, பெங்களூரு, ஹைதராபாத், கோர்கான், டெல்லி, சண்டீகர். சென்னை, சிலிகுரி, லூதியானா,  முக்தேஷ்வர், கர்னல், மணாலி, ஆமதாபாத் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டியில் சிம்லாவைச் சேர்ந்த வீரர்கள் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும் இதுவரை அல்லாத அளவுக்கு இந்தப் போட்டியில் அதிக அளவுக்கு வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply