- சினிமா, செய்திகள்

சிம்புவுடன் நடிக்க பயந்தேன்

 

கவுதம்மேனன் இயக்கும் `அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமாகிறார், மஞ்சிமா மோகன். இந்தப் படத்தில் நடிக்கும்போதே மஞ்சிமாவுக்கு புதிய படங்கள் தேடிவரத் தொடங்கி விட்டன. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாகி முடிந்தால் படம் திரைக்கு வந்து விடும். பாடல் காட்சிக்காக துருக்கி பறக்க இருக்கிறது, படக்குழு.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி நாயகி மஞ்சிமாமோகனிடம் கேட்டபோது “சிம்புடன் நடிக்கும்போது நிஜமாகவே பயம் வந்து விட்டது. எவ்வளவு பெரிய எமோஷனல் காட்சி என்றாலும் ஒரே டேக்கில் நடித்து விடுகிறார். அதனால் அவர் நடிக்கும்போது நாம் சொதப்பி விடக்கூடாதே என்ற பயம் வந்து விட்டது. பல காட்சிகளில் அந்த பதட்டத்துடனேயே நடித்தேன். நாயகியாக அறிமுகமாகும் முதல் படமே டைரக்டர் கவுதம்மேனன், சிம்பு என்று அமைந்தது என்அதிர்ஷ்டம். படம் பற்றி சரியா சொலலணும்னா அவருக்கு உரிய பாணியில்  மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் கவுதம்மேனன்'' என்கிறார்.

Leave a Reply