- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

சித்திரையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில்…

தா.பேட்டை,ஏப்.15-

திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சிவாலயம் உள்ளது. தமிழ் மாதத்தின் சித்திரை முதல் நாள் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய உதயத்தின் போது ஒளிக்கற்றைகள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணியளவில் சூரிய கதிர்கள் கோவில் நுழைவாயிலை கடந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
இதனைக்கண்ட பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். தமிழ் மாதத்தின் துவக்கத்தில் சூரியனே சிவபெருமானை வணங்குவதாக ஐதீகம் இந்த சூரிய வழிபாடு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். இந்த அபூர்வ நிகழ்வு வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடக்கும். திரளான பக்தர்கள் சூரிய வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

Leave a Reply