- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம்…

மதுரை, ஏப்.20-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேச பெருமானுக்கும் நேற்று கோலாகலமாக திருக்கல்யாணம் நடந்தது. இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
திக் விஜயம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. அன்னையின் திருக்கல்யாணம் காண திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மதுரையை நோக்கி கிளம்பி வந்தனர்.
பட்டாடை
இதனைத் தொடர்ந்து, நேற்று சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுக்கும் பட்டாடை சார்த்தப்பட்டது. அதனைதொடர்ந்து  மீனாட்சிஅம்மனுக்கும் பட்டுச்சேலை சார்த்தப்பட்டது. பிறகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரருக்கு தாரைவார்த்து கொடுக்கும் வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து காலை 8.50 மணியளவில் மீனாட்சியம்மன் பிரதிநிதியாக இருந்த  சிவக்குமார் பட்டரும், சுந்தரேஸ்வரர் பிரதிநிதியாக இருந்த செந்தில் பட்டரும் மாலைமாற்றி கொண்டனர்.
வைரத் தாலி
சுபயோக சுபவேளையான காலை 8.54 மணியளவில் ரிஷபலக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட வைரத்தாலி அணிவிக்கப்பட்டது. பின்னர் பிரியாவிடை அம்மனுக்கும் வைரத்தாலி அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருக்கல்யாண வைபத்தை நேரில் பார்த்து கொண்டிருந்த பெண்களும், கோயிலை சுற்றியும், மற்றும் வீடுகளிலும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த பெண்களும் தங்களது தாலிகளை மாற்றி, புது தாலிக்கயிறுகளை அணிந்து கொண்டனர்.
வீதி உலா
பின்னர் மணக்கோலத்தில் மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேஸ்வரம் அம்மன்சன்னதி அருகேயுள்ள பழைய திருமணமண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது முதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் நீண்ட கியுவரிசையில் நின்று சுவாமி மிதரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு  பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், ஆகியோர் பூப்பலக்கிலும், தெய்வானையுடன் முருகப்பெருமான் மற்றும் பவளக்கனிவாய் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் 4 மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித் தனர்.
விருந்து நிகழ்ச்சி
திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இந்த விருந்து காலை 9 மணிமுதல் மாலை வரை நடந்தது.
மங்களம் தரும் மதுரைக்கரசி
இதனைத்தொடர்ந்து  இன்று தேரோட்டமும் நடக்கிறது. இதில்  பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரப்பெருமாள் ஒருதேரிலும், அம்மன் தனித் தேரிலும், வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 4 மாசிவீதிகளிலும்
மதுரைக்கரசியான மாணிக்கமூக்குத்தி மரகத மீனாட்சி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து
மங்களம் தரும் நிகழ்வுடன் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.
அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா நடந்து வருகிறது. வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக
இன்று அழகர்கோயிலிலிருந்து மதுரைக்கு சுந்தரராஜப்பெருமாள் புறப்பாடாகிறார்.

Leave a Reply