- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சாலை விபத்தில் மரணம் அடைந்தவருக்கு ரூ.13 லட்சம் நஷ்ட ஈடு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச்.10
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் டிரைவர் விக்னேஷ் (21). கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கரணையில் இருந்து எழும்பூருக்கு மேரட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைதாப்பேட்டை அருகே தாம்பரத்தில் இருந்து தியாகராயநகர் செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்து மோதியது. இதில் விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு ரூ.22 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோபால், சாந்தா ஆகியோர் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாலிபரின் மரணத்திற்கு ரூ.12 லட்சத்து 88 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply