- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

சாலை விபத்தில் பேராசிரியர்கள் தம்பதி பலி…

 

மணப்பாறை,ஏப்.15-

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65). அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சாரதா (50). இவர் மதுரை மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களது மகன் ராமசாமி (16). இவர்கள் மூவரும் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார், காரை பிரபு (29) ஓட்டினார்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே வரும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி, சாரதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமசாமி, ஓட்டுனர் பிரபு ஆகிய இருவரும் காயமடைந்தனர். சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply