- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சாலை விபத்திலும், –உடல்நல குறைவாலும் பலியான 14 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி

சென்னை, பிப். 7-–
சாலை விபத்துகளிலும், உடல்நலக் குறைவாலும் பலியான 14 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்-–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–-
சாலை விபத்து

சென்னை பெருநகர காவல், மடிப்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த பாலமுருகன், திருச்சிராப்பள்ளி மாநகரம், கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ஆரோக்கியதாஸ், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த முனியசாமி, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த பாஸ்கரன், திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்த கார்த்திகேயன், கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்த சண்முகம் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
உடல்நலக் குறைவால்…
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகர போக்கு வரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்த திருவேங்கடம், வேலூர் மாவட்டம், அணைகட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்த சந்திரசேகர், திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட தனிப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த தாமோதரன்,
அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த எழிலழகன், திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்த மனோகரன்,
சேலம் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்த பக்ருதீன்,
மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த காசி ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

14 போலீசார் குடும்பங்களுக்கு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 14 போலீசாரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த போலீசாரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply