- செய்திகள்

சார்க் அமைச்சர்கள் மாநாடு: அருண் ஜெட்லி புறக்கணிப்பு? பாகிஸ்தானில் நடைபெறும்…

புதுடெல்லி, ஆக.17-

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சார்க் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் அருண் ஜெட்லி கலந்து கொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்கப்படகிறது.

2 நாள் மாநாடு

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) நிதி அமைச்சர் மாநாடு வருகிற 25-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்ற மாட்டார் என்று கூறப்படுகிறது.

மோடி இறுதி முடிவு
அவருக்கு பதிலாக ெபாருளாதார விவகாரங்கள் செயலாளர் சக்திகாந்த தாஸ் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, இறுதி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 4-ந் தேதி சார்க் கூட்டமைப்பின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை தொடர்ந்து அருண் ஜெட்லி, சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறார் என்று கூறப்படுகிறது.

————

Leave a Reply