- செய்திகள், மாநிலச்செய்திகள்

சாய்னா முன்னேற்றம் இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்

புதுடெல்லி, மார்ச் 31:-

புதுடெல்லியில் நடந்து வரும் இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு சாய்னா நேவால், ரிது பர்னாதாஸ் முன்னேறியுள்ளனர்.

ரூ.1.98 கோடி மதிப்பு பரிசுத்தொகை கொண்ட இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி புதுடெல்லியில் உள்ள ஸ்ரீ போர்ட் அரங்கில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சக நாட்டு வீராங்கனை தன்வி லாடை எதிர்கொண்டார் சாய்னா நேவால். ஒருதரப்பாக 34 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில் தன்வியை 21-7, 21-13 என்ற கேம்களில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா.

மற்றொரு ஆட்டத்தில் அனுரா பிரபுதேசாயை 21-18, 21-15 என்ற கேம்களில் வீழ்த்தினார் ரிதுபர்னாதாஸ்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தோனேசிய வீரர்  சோனி டி குன்குரோவிடம் 20-22, 13-21 என்ற கேம்களில் அதிர்ச்சித் தோல்வி கண்டார் இந்திய வீரர் சாய் பிரணீத்.  அதேபோல, இந்திய வீரர் அஜெய் ஜெயராமை 12-21, 21-13, 19-21 என்ற கேம்களில் வெளியேற்றினார் ஜெர்மன் வீரர் மார்க் ஜீப்ளர்.

மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் கபில் சவுத்ரி, ஸ்மிரிதி நகர்கோட்டியை 21-7, 21-3 என்ற கேம்களில் சாய்த்தனர் அஸ்வினி பொன்னப்பா, மனுஅர்தி ஜோடி.

Leave a Reply