- செய்திகள், விளையாட்டு

சாய்னா, சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி

உஹான் (சீனா) ஏப்.26:-

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து இருவரும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சீனாவில் உள்ள உஹான் நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி நேற்று தொடங்கியது.
இதில் முதல் சுற்றில் இந்தப் போட்டியில்  5-வது இடத்தில் உள்ள சாய்னா 21-16, 21-17 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியை வீழ்த்தி அடுத்த சுற்றை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-10, 21-13 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் மற்றொரு வீராங்கனை மரியாவை வீழ்த்தினார்.
அதே சமயம் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி கொரியாவின் சாங், லீ ஜோடியிடம் 15-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
அதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, சுமீத் ரெட்டி ஜோடி ஜப்பானின் ஹிரோயுக்கி, கெனிசி ஜோடியிடம் 15-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
மற்றொரு ஜோடியான பிரணவ் ஜெர்ரி சோப்ரா, அக்‌ஷய் ஜோடியும் தோல்வி கண்டது. இவர்கள் ஹாங்காங்கின் சின் செங் மற்றும் தங் சன்னிடம் தோல்வி கண்டனர்.

Leave a Reply