- செய்திகள், விளையாட்டு

சாய்னா, சானியா, கோலிக்கு இடம் ஆசியாவின் தலை சிறந்த இளம் விளையாட்டு வீரர்கள் பட்டியலில்

நியூயார்க், பிப்.26:-

ஆசியாவின் தலை சிறந்த வளர்ந்து வரும் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட 56  இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து மாதம் இரண்டு முறை வெளியாகும் போர்ப்ஸ் இதழில் இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. 30 வயதுக்குள்பட்ட ஆசியாவின் வளர்ந்து வரும் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்தியா, இந்தோனேசியா, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், வியத்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

56 இந்தியர்கள் இடம் பிடித்துள்ள இந்தப் பட்டியலில் கோலி, சானியா, சாய்னா மற்றும் நடிகை சாரதா கபூர் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

Leave a Reply