- செய்திகள், விளையாட்டு

சாம்பியன் லீக் கால்பந்து காலிறுதிப்போட்டி சுராஸ் ‘கோலால்’ பார்சிலோனா அபாரம்

பார்சிலோனா, ஏப். 7:-

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது பார்சிலோனா அணி.
அந்த அணியின் நட்சத்திர வீரர் சுராஸ் அபாரமாக 2 கோல் அடித்து அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற உதவியுள்ளார்.

பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நோ அரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த முதலாவது காலிறுதி ஆட்டத்தில் வலிமை வாய்ந்த பார்சிலோனா அணியை எதிர்த்து மோதியது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி மோதியது.

தொடக்கத்திலேயே பார்சிலோனாவுக்கு நெருக்கடி கொடுத்த அட்லெட்டிகோ மாட்ரி அணி 25-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. அந்த அணி வீரர் டோரஸ் கோல் அடித்து, 1-0 என அணிக்கு முன்னிலை பெறச்செய்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற  பார்சிலோனா அணியால் முதல்பாதிவரை கோல் அடிக்க முடியவில்லை.  அதேசமயம், முதல்பாதியில் டோரஸ் களத்தில் செய்த தவறால் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால், அட்லெட்டிகோ அணி 10 வீரர்களுடன் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது.

2-வது பாதியில் பார்சிலோனா அணி வீரர்கள் வேகம் காட்டியதால், 63-வது நிமிடத்திலும், 74-வது நிமிடத்திலும் சுராஸ் கோல் அடித்து அணியை 2-1 என்று முன்னிலை பெறவைத்தார். இதை முறியடித்த ஆட்டம் இறுதிவரை மாட்ரிட் அணி முயன்றும் முடியாததால், 2-1 என பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

ஆனால், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 500-வது கோல் அடிப்பார் என எதிர்பார்ப்பு பொய்யானது. 2-வது காலிறுதி ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே வரும் 13-ந்தேதி நடக்கிறது.

Leave a Reply