- செய்திகள், விளையாட்டு

சாம்பியன் பட்டத்துக்காக காத்திருக்கும் லீசெஸ்டர் பிரிமியர் லீக் கால்பந்துப்போட்டி

லண்டன், ஏப்.27:-

பாரம்பரியம் மிக்க, பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல லீசெஸ்டர் சிட்டி அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.

பிரிமியர் லீக் சாம்பியன் போட்டியின் பட்டியலில் தற்போது 76 புள்ளிகளுடன் லீசெஸ்டர் அணி முதலிடத்தில் இருக்கிறது. 2-ம் இடத்தில் 69 புள்ளிகளுடன் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும், 64 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி 3-வது இடத்திலும் இருக்கிறது.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஓல்டு டிராபோர்ட் நகரில் நடக்கும் மான்செஸ்டர்  அணியுடனான ஆட்டம் லீசெஸ்டர் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி  ஏறக்குறைய 132 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும்.
ஒருவேளை இந்த ஆட்டத்தில் தோற்றாலும், அடுத்து வரும் எவர்டன், செல்சி அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே லீசெஸ்டர் அணி பட்டத்தை தனதாக்கும்.

அதேசமயம், நேற்றுமுன்தினம் லண்டனில் நடந்த வெஸ்ட் புரோம்விக் அல்பியன்- டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ்  அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதனால், புள்ளிக்கணக்கில் அந்த லீசெஸ்டர் அணியை எட்டிப்பிடிக்க முடியாமல், டோட்டன்ஹம் அணி 7 புள்ளிகள் பின்னடைந்து இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் டோட்டன்ஹம் அணி வென்று இருந்தால், லீசெஸ்ட்ர் அணிக்கு கடும் சவாலாக இருந்திருக்கும். இருப்பினும் டோட்டன்ஹம் ஸ்பர்ஸ் அணிக்கு இன்னும் செல்சீ, சவுத்தாம்டன், நியுகேசில் ஆகிய அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் மீதம் உள்ளன இதில் அனைத்திலும் வெற்றி பெறுவது அவசியமாகும்.

கடந்த 1961-ம் ஆண்டுக்குப் பின் டோட்டன்ஹம் ஸ்பர்ஸ் இன்னும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக பட்டத்தைக் கைப்பற்றும் முயற்சிக்கு அருகே டோட்டன்ஹம் அணி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply