- செய்திகள், விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ‘பைனலில்’ அட்லெட்டிகோ மாட்ரிட் 3-வது முறையாக வெளியேறியது பேயர்ன் முனிச்

முனிச், மே 5:-

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்லெட்டிகோ மாட்ரிட் அணி அபாரமாக தகுதிபெற்றது.

முனிச் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த 2-வது அரையிறுதியில் பேயர்ன் முனிச் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி.

இந்த தோல்வியையடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக பேயர்ன் முனிச் அணி அரையிறுதியோடு வெளியேறியது.  இதையடுத்து இம்மாதம் 28-ந்தேதி மிலன் நகரில் நடக்கும் இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் அல்லது மான்செஸ்டர்சிட்டி ஆகிய இருஅணிகளில் ஒரு அணியுடன் அட்லெட்டிகோ அணி மோத உள்ளது.

முனிச் நகரில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், பேயர்ன் முனிச் சார்பில் அலான்சோ 31-வது நிமிடத்திலும், லிவான்டோஸ்கி 73-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதற்கு பதிலடியாக அட்லெட்டிகோ மாட்ரிட் அணி வீரர் அன்டோனி கிரிஸிமான் 53-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால், ‘அவே கோல்’ விதி மூலம் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி வென்றது.

Leave a Reply