- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

சானியா, ஹிங்கிஸ் ஜோடி தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி

தோஹா, பிப்.27:-

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி கால் இறுதிப் போட்டியில் தோல்வி கண்டது.

கத்தார் தலைநகர் தோஹாவில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சானியா மிர்சாவும், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸும் மோதினர். இந்த ஜோடி 2-6, 6-4, 10-5 என்ற கணக்கில் கடுமையான போராட்டத்துக்குப் பின் ரஷியாவின் எலேனா வெஸ்னினா, டாரியா கசத்கினா ஜோடியிடம் தோல்வி கண்டனர். முன்னதாக சானியா ஜோடி இதுவரை 40 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் 41-வது தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் சானியா ஜோடி பிரிஸ்பேன், சிட்னி ஓபன் பட்டங்களை வென்றது. அத்தோடு, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றது. மேலும் இந்த ஜோடி இந்த ஆண்டின் துவக்கத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் ஓபன் போட்டியிலும் பட்டம் வென்றது.

Leave a Reply