- செய்திகள், விளையாட்டு

சாதனைகள் தொடரும்-தீபா

 

புதுடெல்லி, ஏப்.22:-
இனிமேல் எங்கு போட்டியிட்டாலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்துவேன் என்று ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார். முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டிக்காக பிரேசில் சென்றார் தீபா. இதையடுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அங்கிருந்து தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லியில் நேற்று பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம பேசிய தீபா, ஒலிம்பிக் போட்டியில் சாதனை நிகழ்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறுவதுதான் எனது முதல் இலக்காக இருந்ததது. அதில் சாதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் அதற்காக பல தடைகளையும் தாண்ட வேண்டியிருக்கும். அவற்றையெல்லாம் தாண்டிதான் சாதனை படைக்க முடியும் என்றார்.தன்னுடைய பயிற்சிக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்த இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தீபா குறிப்பிட்டார்.

Leave a Reply