சாகசம் நிறைந்த படம் ‘பஞ்சராக்ஷரம்’

நீர், நிலம், காற்று ,நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் குணத்தை அடைப்படையாக கொண்டு ‘‘பஞ்சராக்ஷரம்’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை பாரடோஸ் புரொடெக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் வரமுத்து தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் பஞ்ச பூதம் கொண்ட 5 கேரக்டர்களாக சந்தோஷ், கோகுல், சீமான், மதுசாலினி,சனா ஆகியோர் நடிக்க வில்லனாக புதுமுகம் சீமான் நடித்து இருக்கிறார். கதை வசனம் எழுதி பாலாஜி வைரமுத்து இய்க்கி இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது‘‘‘நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் ‘‘என்றார்.
இயக்குநர் பாலாஜி வைரமுத்து பேசும்போது,‘.’பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன். இப்படத்தில் சிவனை உணரலாம். வாழ்க்கையை எப்போதும் பாசிட்டிவ் ஆக சிந்திக்கவேண்டும். அப்படி பாசிட்டிவ்வாக சிந்தித்தால் பாசிட்டிவ் வாகவே நடக்கும் என்பதை படம் சொல்லும்.
படத்தில் பஞ்ச பூதங்களை கேரக்டர்களாக வைத்து கதை சொல்லி இருக்கிறேன். இவர்கள் ஐவரும் ஒன்றாக இணையும்போது, அவர்களிடம் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகம் எதிர்காலத்தைப் பற்றி கூறும். அது அவர்களிடம் கிடைத்த பின் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் ‘பஞ்சராக்ஷரம்’.‘‘என்றார்.
மற்றும் பாடலாசிரியர் ஜிகேபி ,நடிகர் கோகுல் ,நடிகர் சீமான்,இசையமைப்பாளர் சுமோ, கலை இயக்குநர் சசி ,படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின் .சண்டை பயிற்சியாளர் பில்லா ஜெகந்நாதன் ஆகியோரும் பேசினார்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *