- செய்திகள்

சஸ்பெண்டு உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…

 
சென்னை, ஆக.18-
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சட்டசபையில், மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று (நேற்று) காலை சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தி.மு.க. உறுப்பினர்களை குறிப்பாக எதிர்கட்சித் தலைவரை சட்டமன்றக் காவலர்கள் மூலம் வெளியேற்றியிருப்பது ஏற்புடையதல்ல. ஆளும் கட்சி சட்டமன்றத்திலே தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் மீது அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கக் கூடாது. எதிர்கட்சிகள் மசோதாக்கள் குறித்து விவாதம் செய்வதற்கு ஆளும் கட்சி முறையாக, சரியாக அனுமதி வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளதால் எதிர் கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சி சஸ்பெண்ட் செய்திருப்பதை மறு பரிசீலனை செய்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Leave a Reply