- செய்திகள், வணிகம்

சவுத் இந்தியன் பேங்க் லாபம் 16 சதவீதம் வளர்ச்சி

சவுத் இந்தியன் பேங்க் இந்த நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) நிகர லாபமாக ரூ.101.63 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதி  ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.58 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் சவுத் இந்தியன் வங்கி ரூ.87.93 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. இந்த வங்கியின் மொத்த வருவாய் 6.39 சதவீதம் அதிகரித்து ரூ.1,467.13 கோடியில் இருந்து ரூ.1,560.98 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வாராக் கடன் 1.8 சதவீதத்தில் இருந்து 2.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வாராக் கடன் 1.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply