- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

சவுதியில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மதுரை நீதிமன்றத்தில் 28-ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் இந்திய வெளியுறவுத்துறைக்கு நோட்டீசு…

மதுரை,ஏப்.21-
சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 62 தமிழக மீனவர்களை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 28-ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆட்கொணர்வு மனு
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் கடந்த மார்ச் மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடைய மாமா சேதுராஜாவும் 61 மீனவர்களும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள யூசுப் கலீலிடம் வேலை பார்க்கச் சென்றனர். அங்கு சம்பளம், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் சித்ரவதை செய்யப்படுவதாக இணையதளத்தில் தகவல் அனுப்பியுள்ளனர். எனவே அவர்களை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.
உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பி.கோகுல்தாஸ் ஆகியோர் 62 மீனவர்களையும் வரும் 28-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Leave a Reply