- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

‘சவாலை எதிர்கொள்வோம்’- டேரன் சாமே

மும்பையில் நேற்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சாமே அளித்த பேட்டியில் கூறியதாவது:

வரலாற்றில் வரக்கூடிய டேவிட்-கோலியத் சண்டை போலவே இந்த போட்டியை நான் பார்க்கிறேன். அதேசமயம், இளம் டேவிட், கோலியத்தை வென்றதை யாரும் மறந்துவிடக்கூடாது. நாங்கள் இன்னும் எங்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடவில்லை. பெரும்பாலான ஆட்டங்களில் பந்துவீச்சு, அல்லது பேட்டிங் இதில் ஏதாவது ஒரு துறை மட்டுமை கைகொடுத்து இருக்கிறது. இருதுறைகளும் சிறப்பாகச் செயல்படவில்லை.

இந்திய அணியில் கோலி, தோனி, ரெய்னா ஆகியோரை குறைத்து மதிப்பிட முடியாது.  மேற்கிந்தியத்தீவுகள் அணியின் 15 வீரர்களுக்கும்,கோடான கோடி இந்திய ரசிகர்களுக்கும் இடையிலான இது மோதலாகும். இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்வோம். எங்களின் திட்டத்தை சரியாக செயல்படுத்தும் பட்சத்தில் வெற்றி உறுதியாக கிடைக்கும். இதற்கு முன் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், இந்த ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply