- செய்திகள், விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் தூதுவராக மேரிகோம்

புதுடெல்லி, ஏப். 15:-

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அஸ்டனா நகரில் மே 19-முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. அந்த தொடரின் தூதுவராக இந்திய வீராங்கனை மேரி கோமை சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு  நியமித்துள்ளது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்காக சர்வதேச அளவில் நியமிக்கப்பட்டுள்ள 8 தூதுவர்களில் மேரி கோமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வீராங்கனை மேரி கோம் கூறுகையில் “ இந்தியரான எனக்கு மிகப்பெரிய கவுரவம் ஆகும். சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் சார்பின் பிரதிநிதியாக இருக்கிறேன்.இந்த மரியாதை அனைவருக்கும் கிடைத்துவிடாது '' என்று அவர் தெரிவித்தார். 51கிலோ எடைப்பிரிவில் இதுவரை 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2012-லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply