- செய்திகள், விளையாட்டு

சர்வதேச கால்பந்து சம்மேளனத் துணைத் தலைவர் பதவி இந்திய நீதிபதி முகுல் முத்கல் நியமனம்

புதுடெல்லி, மே 16:-
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் முகுல் முத்கல்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முத்கல், இணையதளம் மூலம் தான் நியமிக்கப்படுள்ளது குறித்து அறிந்து கொண்டதாகவும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தனக்கு வந்து சேரவில்லை என்றும் தனது நியமனம் இந்திய நீதித்துறைக்கு கிடைத்துள்ள கௌரவம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி முகுல் முத்கல் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஆசிய கால்பந்து சம்மேளனமும் இவரைத் துணைத் தலைவராக பதவி வகிக்கிமாறு கேட்டு அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply