- செய்திகள்

சர்க்கரை நோய் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு…

 

சென்னை, ஆக.29-

சென்னையை சேர்ந்த ஏசர் ஹெல்த் நிறுவனம் சர்க்கரை நோயினால் பாதிக்க பட்டுள்ள பெண்களுக்கு திவாஸ் என்ற ஆதரவு அமைப்பை தொடங்கி உள்ளது.

இதன் தொடக்க விழாவில், பெண்கள் கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுபாட்டிற்குள் வைத்து கொள்வது பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  ‘பிட் டு பி மாம்’ என்ற திட்டமும், எலும்பு அடர்த்தி நோய் ஏற்படாமல் பாதுகாப்பது பற்றிய விழுப்புணர்வு திட்டமும் விழாவில் துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்தியா ,மருத்துவ ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், பப்ளிக் ஹெல்த் பவுண்டஷன் துணைத்தலைவர் பி. பிரபாகரன், டாக்டர் சரிதா பஜாஜ்,, டாக்டர் பிரதிகா சாரி ஆகியோர்
பேசினார்.

ஏசர் ஹெல்த் நிறுவன இயக்குனர் மற்றும் அகநாளச் சுரப்பு நிபுணர் உஷா ஸ்ரீராம் இந்த புதிய அமைப்பை பற்றி கூறுகையில், ‘ பெண்களுக்கு உதவ தொடங்க பட்டுள்ள திவாஸ் என்ற ஆதரவு அமைப்பு, நோயினால் பாதிக்க பட்டுள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏறபடுத்தும். இந்த பெண்கள் அமைப்பு மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி சர்க்கரை நோய் இல்லா சமுதாயத்தை உருவாக்க முடியும்’ என்றார்.

Leave a Reply