- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சரத்குமார் மேற்கொண்டு வரும் ‘மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ 2-ம் கட்ட பயணம் விரைவில் தொடக்கம்

சென்னை, பிப்.17-
சரத்குமார் மேற்கொண்டு வரும் ‘மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ 2-ம் கட்ட பயணம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2-ம் கட்ட பயணம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் 12-ந் தேதி முதல் கொங்குமண்டலத்தில் தொடங்கிய ‘மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு’ முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் 4-ம் நாளான  நீலகிரி மாவட்டம் கூடலூர் தொடங்கி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், புகளூர், அன்னூர், விளாங்குறிச்சி நேருநகர் வரையில் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்றது.
இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த துணை பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply