- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சரத்குமார் அறிவிப்பால் தொண்டர்கள் கிர்ர்……. என்னமா இப்டி பண்றீங்களேமா…

தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து விருப்பமனுக்கள் பெறுவது அரசியல் கட்சிகளின் வழக்கம். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் விருப்பமனு செய்து, கட்சி தலைமை அலுவலகத்தையே விழாக்கோலமாக்கினர். அதேபோல், தி.மு.க.,விலும் தொகுதி வாரியாக முக்கியமான பிரமுகர்கள் விருப்ப மனு செய்தனர். தே.மு.தி.க., காங்கிரஸ், த.மா.கா., ஆகிய கட்சிகளிலும் விருப்பமனுக்கள் பெறப்பட்டு, இப்போது நேர்காணலும் நடந்து வருகிறது.

பெரிய கட்சிகள் விருப்ப மனு மூலமாக, பெரும் தொகையை கட்சிக்கு மறைமுக நிதி வசூலிக்கும் விதமாகவும், ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களை கண்டு கொள்ளும் விதமாகவும், இந்த விருப்ப மனுவை வாங்குவர். இதேபோல், நேர்காணல் மூலம் கட்சியினரின் எண்ணங்களை தெரிந்து கொள்வதும் வழக்கம்.

இந் நிலையில், அண்மையில் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கூட்டணியில் சேர்வதற்கு முன்பே, நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று கூறி, பா.ஜ.க..,வினரை அதிர்ச்சி அடையவைத்த சரத்குமார், இப்போது 234 தொகுதிகளிலும் விருப்பமனு செலுத்தலாம் என்று கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து, கட்சியினரை கிர்ராக்கியுள்ளார். இதுபோல கோகுல மக்கள் கட்சியும் 234 தொகுதிகளுக்கு விருப்ப மன அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பெரிய கட்சிகள், விருப்ப மனு வாங்குவது நியாயம். ஆனால் கடந்த தேர்தலில், எதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து,  ஒரு சீட்டோ, ஒன்னரை சீட்டோ, அல்லது  கூட்டணி தலைவரின் இதயத்தில் மட்டும் இடம் பிடித்த கட்சிகள், 234 தொகுதிகளிலும் எதற்காக விருப்ப மனு வாங்கிறார்கள் என்ற குழப்பத்தில் நிற்கிறார்கள் சிறு கட்சித் தொண்டர்கள்.

Leave a Reply