- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்தது…

 

சென்னை,பிப்.3-
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்  பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் விலைக்கேற்ப சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கிறது.
ஒவ்வொரு மாதமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த விலையில் மக்கள் சமையல் கியாசை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
சமையல்  கியாஸ் சிலிண்டரை போல வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்  விலையும் மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா விலை  குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதத்தை விட வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும்  வர்த்தக பயன்பாடு சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.
சென்னையில்  வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்து ரூ.587 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1372.50 ஆக இருந்தது.  இதன் விலை தற்போது ரூ.167 குறைந்து ரூ.1205 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply