- செய்திகள், வணிகம்

சமையல் கியாஸ் சப்ளை செய்ய புதிதாக 10 ஆயிரம் விநியோகஸ்தர்கள் தர்மேந்திர பிரதான் தகவல்

பாலியா, ஏப்.25:-

இந்த 2016-17-ம் நிதி ஆண்டில் புதிதாக 10 ஆயிரம் சமையல் கியாஸ் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நாடு முழுவதுமாக தற்போது 18 ஆயிரம் சமையல் கியாஸ் விநியோகஸ்தர்கள் உள்ளனர். சமையல் கியாஸ் சப்ளையை விரிவுப்படுத்தும் வகையில், அடுத்த 3 மாதங்களில் முதல் கட்டமாக புதிதாக 2 ஆயிரம் சமையல் கியாஸ் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 2017 மார்ச் இறுதிக்குள் மேலும் 8 ஆயிரம் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

2016 மே 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி `பிரதமர் மந்திரி உஜ்வாலா' திட்டத்தை இங்கு தொடங்கி வைப்பார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இந்த திட்டத்தன் முக்கிய நோக்கமாகும். இதற்காக ரூ.8 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply