- செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, மேலும் ரூ.25 உயர்வு ஒரே மாதத்தில் ரூ. 100 உயர்ந்தது

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, நேற்று மேலும் ரூ.25 உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாறுபட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணெய் விலையானது, கடந்த 5 ஆண்டுக்கு முன்பிருந்த விலையை விடவும் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

ஆனாலும் கூட, கடந்த சில மாதங்களாகவே சிலிண்டரின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 4 ந்தேதி சமையல் சிலிண்டரின் விலை ரூ.25 -ம், பிப்ரவரி 15 ந் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதன்மூலம், சென்னையில் சிலிண்டரின் விலை ரூ.785ல் இருந்து ரூ.810 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சமையல் சிலிண்டர் விலை அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் மாத வாக்கில் இரண்டு கட்டங்களாக சிலிண்டர் விலை ரூ.150 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.

Leave a Reply