- செய்திகள், வணிகம்

சமாளிக்க தயாராக இருக்கிறோம்

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம் உயர்வு  இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகந்ததாஸ் நேற்று கூறுகையில் “ அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வை எதிர்கொள்ள இந்தியா சிறப்பாகவே தயாராகி இருக்கிறது. இந்த உயர்வு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். எப்போது வட்டிவீதம் உயர்த்தப்படும் என்ற நிச்சயமற்ற நிலை இப்போது மறைந்துவிட்டது. வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு நாட்டின் எதிர்காலத்தை கொண்டுசெல்ல இது உதவியாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு, இந்தியாவின் ஏற்றுமதி சூழலுக்கு உகந்த நிலையாகும். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த வட்டிவீத உயர்வு அறிவிப்பில் பங்குச்சந்தையில் இருந்து எந்த முதலீட்டாளர்களும் குறிப்பிடத்தகுந்த அளவு முதலீட்டை திரும்பப் பெறவில்லை. பெடரல் வங்கியின் முடிவு இந்தியாவை பாதிக்காது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply